தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினால் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்திற்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றி படமாக டாக்டர் அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வீடியோ:
இந்நிலையில் டாக்டர் படம் வெளியானதற்கு பிறகு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவரிடம் தொகுப்பாளர்கள், நீங்கள் ரீமேக் படங்களில் நடிக்காதற்கான காரணம் என்ன? அந்த மாதிரி ரீமேக் பட வாய்ப்புகள் வந்திருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் கூறியது, ரீமேக் படம் இதுவரை நான் பண்ணதில்லை. ரீமேக் படம் பண்ண சொல்லி நிறைய வாய்ப்பு வந்திருக்கு. ஆனால், நான் பண்ணது இல்லை. எனக்கு தெரிந்து இப்ப இருக்கும் நடிகர்களில் ரீமேக் பண்ணாத ஒரே ஹீரோ நான் தான் என்று சொல்லலாம்.
ரீமேக் படம் பற்றி சிவா சொன்னது:
ஏன்னா, எனக்கு ரீமேக் பண்ண கூடாது என்று இல்லை. ரீமேக் பண்ணுவதற்கு பயமாக இருக்கிறது. இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஓடிடி வளர்ச்சியில் எல்லோருமே படங்களை பார்த்து விடுகிறார்கள். இந்த சமயத்தில் ரீமேக் படம் பண்ணி அது ஏதாவது தேவையில்லாமல் பிரச்சனை வந்துவிடுமோ? என்ற பயத்தினால் தான் நான் ரீமேக் பண்ண வில்லை. ஆனால், எனக்கு ரீமேக் படம் பண்ண சொல்லி நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி வந்த படங்கள் பார்த்தால் பிரேமம் படத்தை ரீமேக் பண்ண சொல்லி என்னிடம் கேட்டார்கள்.
பிரேம் படம் பற்றி சொன்ன சிவா:
நான் முடியாது அது பிரேமம் என்பது படமல்ல கதை அல்ல வாழ்க்கை மேஜிக் அது ஒருமுறைதான் நிகழும் என்று சொன்னேன். ஏன்னா, ப்ரேமம் என்பது கதை அல்ல, வாழ்க்கை,மேஜிக் என்று சொன்னேன். சொல்லியும் திரும்ப திரும்ப என்னிடம் கேட்டார்கள். நான் உடனே பிரேமம் பட இயக்குனர் எடுத்தால் தான் நான் இதில் நடிப்பேன் என்று சொன்னேன். பின் எனக்கு பிரேமம் படத்தின் இயக்குனர் போன் பண்ணி பேசினார். அப்போது அவர், இதையே நானே பல விஷயங்களில் இருந்து தான் எடுத்து பண்ணினேன்.
ரீமேக் பட வாய்ப்புகள்:
இது நிஜமாகவே எனக்கு ஒரு மேஜிக் போல் தான் அமைத்தது என்று சொன்னார். உடனே நானும், சார் இது தான் சார் நானும் சொன்னேன். நீங்கள் இதை அப்படியே எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள் என்று சொன்னேன். பின் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் ரீமேக் பண்ண சொல்லி கேட்டு இருந்தார்கள். ஆனால் எனக்கு ரீமேக் படம் பண்ண விருப்பமில்லை. அதற்கான கதை சரியான தருணம் அமைந்தால் ரீமேக் பண்ணுவேன் என்று கூறி இருக்கிறார்.