அஜித், கார் ஒட்டி பாத்திருப்பீங்க பைக் ஒட்டி பாத்திருப்பீங்க. கிரிக்கெட் விளையாடி பாத்திருக்கீங்களா.

0
4042
ajith

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம “தல அஜித்”. மேலும்,இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் இந்த வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார். அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லைங்க கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். அதோடு பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த ட்ரோன் குழு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் அடுத்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கூட கலந்து கொண்டு இருந்தார்.

இதையும் பாருங்க :உள்ளாடை தெரியும் ஆடையில் போட்டோ ஷூட். புகைப்படத்தை பதிவிட்ட அபிராமி.

- Advertisement -

அஜித் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார். மேலும், இது சம்மந்தபட்ட பல புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆனால், அஜித்துக்கு கிரிக்கெட் மீது கூட ஆர்வம் இருக்கிறது என்று தற்போது தான் தெரியவந்துள்ளது. சமீபத்தில் அஜித் மடித்த வேஷ்டியில் கிரிக்கெட் மட்டையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித்தின் இப்படி இப்படி ஒரு புகைப்படத்தை இதுவரை கண்டிராத ரசிகர்கள் குஷியில் அளித்திருக்கிறார்கள்.

Image result for ajith playing Cricket"

ஏற்கனவே, சேப்பாக்கத்தில் நடிகர் அஜித் கிரிக்கெட் விளைய்டியா புகைப்படம் ஒன்று வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், படப்பிடிப்பிற்கு நடுவே கிரிக்கெட் விளையாடும் அஜித்தின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் ஒருபுறம் வைரலாக பரவி வருகிறது. அதேபோல தளபதி விஜய் தற்போது தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டபோது நடிகர் விஜய் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்ததாக விஜய் 24 படத்தில் பணிபுரியும் பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement