விஜய்யின் நடனத்தை டிவியில் பார்த்துவிட்டு தன்னுடன் இருந்த நடிகரிடம் அஜித் சொன்ன விடயம்.!

0
1469
Vijayajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. மேலும்,இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது. 

-விளம்பரம்-
Vijay-ajith

பொதுவாக இவர்கள் படங்களுக்கு போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நட்புடன் தான் இருந்து வருகின்றனர். வேலாயுதம் படத்தின் போது கூட இருவரும் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயம் படு வைரலானது.

இதையும் படியுங்க : விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் நடுவில் இப்படி ஒரு சீக்ரட்டா.!போட்டுடைத்த பிரபல நடிகர்.! 

- Advertisement -

என்னதான் இவர்கள் இருவரின் ரசிகர்கள் சிலர் இன்னமும் தல தளபதி சண்டை போட்டுகொண்டு இருந்தாலும். விஜய் மற்றும் அஜித்திற்கு இடையே ஓரு நல்ல நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. விஸ்வாசம் படத்தில் நடித்த ரோபோ சங்கர் பேசுகையில் கூட அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொள்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அஜித்திடம் விஸ்வாசம் படத்தில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்கும் இதுபோன்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,
நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன்  ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர். 

-விளம்பரம்-

 ‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement