ரசிகர்கள் செய்த செயல், ஒரு நொடி ஆரம்பம் அசோக் குமராக மாறிய அஜித் – வைரலாகும் வீடியோ.

0
359
ajith
- Advertisement -

ரசிகர் செய்த செயலால் அஜித் கடுப்பாகி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார்.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையாம்.

துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் :

அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டாடி இருந்தார்கள். இந்நிலையில் ரசிகர்கள் செய்த செயலால் அஜித் கடுப்பாகி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அதாவது, இடையில் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அஜித் அவர்களும் பைக் ரைட் சென்றிருந்தார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் தொடங்கி இருக்கிறது. இதற்காக படக்குழு angkok சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் விமான நிலையத்தில் ரசிகர்கள் மரியாதை இல்லாமல் அஜித் உடன் புகைப்படம் எடுக்கும் முயற்சி செய்திருக்கின்றனர்.

ரசிகர் செயலால் கடுப்பான அஜித்:

இதனால் கடுப்பான அஜித் ரசிகரை முறைத்து பார்த்திருக்கிறார். உடனே அந்த ரசிகர் அங்கிருந்து விரைந்து விலகி சென்று இருக்கிறார். அந்த வீடியோவை தான் ரசிகர்கள் ஆரம்பம் படத்தில் வந்த ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர். துணிவு படத்தை தொடர்ந்து அஜித் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருக்கிறார். அதற்கான அறிவுப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

Advertisement