இனி ‘தல’னு கூப்பிட வேண்டாம். அதுக்கு பதில் இந்த 3 பெயர வச்சி கூப்பிடுங்க. அஜித் வெளியிட்ட அறிக்கை.

0
328
ajith
- Advertisement -

இனி என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அஜித்தின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக என்றென்றும் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் அஜித்குமார். இவருடைய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்றுதான் அழைப்பார்கள். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்து இருந்த நேர்கொண்டபார்வை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டு இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : நிரூப் மற்றும் வருண் குறித்து புட்டு புட்டு வைத்த ஐக்கி பெரி – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர்களுக்கு தற்போது அஜித் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாக இருக்கிறது. அது என்னவென்றால், இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ அல்லது பேசும்போதோ எனது இயற்கை பெயரான அஜித்குமார், அஜித், ஏகே என குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டை பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை தல அஜித் சார்பில் சுரேஷ் சந்திரா அவர்கள் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அன்பான கோரிக்கை என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் எல்லோரும் ஏன்? எதற்கு? என்ன ஆச்சு? என்று குழப்பத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும், பல வருடங்களுக்கு முன் இப்படி தான் அஜித் அவர்கள் தனெக்கென ஒரு ரசிகர் மன்றம் தேவை இல்லை என்று அறிக்கை அறிவித்து இருந்தார். தற்போது இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement