வைரலான நியூ ஏர் கொண்டாட்ட வீடியோ குவிந்த விமர்சனங்கள் – கேப்டனுக்காக அஜித் செய்ய இருக்கும் விஷயம்.

0
699
- Advertisement -

விஜயகாந்தின் இறப்பிற்கு அஜித் வராதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தி, அவருடைய தந்தை சிவக்குமார் உடன் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

அஜித் குறித்த விமர்சனம்:

இன்று நடிகர் சூர்யாவும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அஜித் அவர்கள் விஜய்காந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராமல் இருந்ததை குறித்து பலருமே விமர்சித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஜித் அவர்கள் துபாயில் வெளிநாட்டுப் பெண் ஒருவருடன் நடனம் ஆடியிருந்தார். அந்த வீடியோவெல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

விமர்சகர் சொன்ன தகவல்:

இதை பார்த்த பலருமே விஜயகாந்தின் இறப்பிற்கு வர நேரமில்லை. இதற்கு மட்டும் நேரமிருக்கிறதா என்று விமர்சனம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் அஜித் நாளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாக விமர்சகர் ஒருவர் மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு.

அஜித் நடிக்கும் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இவர்களுடன் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது.

Advertisement