அஜித் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் – குட்டி அஜித் மாதிரி இல்ல, குட்டி ஷாலினி மாதிரி தான் இருக்காரு பாருங்க.

0
5458
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் மனைவி ஷாலினி மற்றும் , மகன் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அது மட்டும் இல்லாமல் இப்போது ட்ரெண்டிங் நியூஸ் இது கூட சொல்லலாம். அதுவும் ரெண்டு பேரும் அப்படியே அஜித்,ஷாலினி மாதிரி ஜெராக்ஸ் காப்பி ஆக இருக்கிறார்கள் கூட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மேலும்,இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்றும் திரைஉலகம் அல்டிமேட் ஸ்டார் என்றும் தான் அழைப்பார்கள். அதோடு நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து அஜித்,ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘அமர்க்களம்’. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை.

இதையும் பாருங்க : ஆரிகிட்ட ஒரு பேச்சு, அனிதாகிட்ட ஒரு பேச்சு, ஆஜீத் கிட்ட ஒரு பேச்சு – இந்த குறும்படத்தால் ரம்யா மேல இருந்த நம்பிக்கையே போச்சு .

- Advertisement -

சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும்.அதுவும் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால் அஜித் செல்பி எடுத்து தர மறுத்து விடுவார். அப்படி மீறி புகைப்படம் வருவது ரொம்ப அரிதான ஒன்று.அஜித் குடும்பத்துடன் இருக்கும் மாதிரி வரும் புகைப்படங்கள் எல்லாம் அவர் எடுப்பதில்லை.

This image has an empty alt attribute; its file name is ajith-childrens-1022x1024.jpg

அஜித் அவ்வளவாக வெளியே வருவது இல்லை என்றாலும் ஷாலினி தனது குழந்தைகளுடன் வெளியில் வருவது வழக்கம் . அப்படி வரும் போது அவ்வப்போது ரசிகர்கள் கண்களில் சிக்கிவிடுகின்றனர் . இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலினி மற்றும் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நெடுநெடுவென வளர்ந்து இருக்கும் ஆத்விக், அஜித்தை போல் அல்லாமல் அச்சு அசலாக தனது அம்மா ஷாலினியை போலத்தான் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement