தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும் உருவாக்கியவர். கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் “ஒத்த செருப்பு சைஸ் 7”. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும்,நடித்தும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இந்த படம் முழுவதும் அவர் மட்டுமே வருவார். அதாவது வேறு எந்த ஒரு நபரின் முகமோ,உருவமோ தெரியாது.
அதுவும் இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் நம்ப ‘அந்நியன் விக்ரம்’ போல மாறி, மாறி பேசி நடித்திருக்கும் காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு பல விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் பிரபலமான விருது விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய படத்திற்காக தற்போது விருதையும் பெற்று இருந்தார். அப்போது அவர் மேடையில் கூறியது, சில தினங்களுக்கு முன்பு கூட நான் பிரபலமான விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அது விகடன் வழங்கும் விருது விழா. அதில் ஒத்த செருப்பு படத்திற்கான அங்கீகாரம் தரவில்லை.
இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கிளாமர். ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யா தங்கையாக நடித்த நடிகையின் புகைப்படங்கள்.
அதற்கு பதில் ஆதரவாக ஒரு விருது கொடுத்தார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதனால் நான் என் வாழ்நாள் முழுவதும் அந்த விருதை வாங்க மாட்டேன் என்று சொல்லி வந்து விட்டேன். இது என்னுடைய கோபம் கிடையாது, கலைஞனின் ஆதங்கம். ஒத்த செருப்பு படம் என்பது ஒரு நல்ல புது முயற்சி. இந்த மாதிரி முயற்சிகளுக்கு ஒரு மரியாதை இல்லை என்றால் கஷ்டமாக இருக்கும். இது வந்து ஒரு கலைஞனின் ஆதங்கம் தவிர மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை. இதை மற்றவர்கள் தப்பாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கலைஞனின் ஆதங்கம் இப்படித் தான் இருக்கும். அந்த வகையில் இந்த விருதிற்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடைய ஆதரவும், நம்பிக்கையும் , அன்பும் என் மீது வைத்திருப்பதற்கு நான் இன்னும் பல முயற்சிகளை செய்து வருகிறேன். இந்த வருடம் நான் ஒரு சிறப்பான, வித்தியாசமான படம் பண்ணப் போகிறேன். அது ஒரு சிங்கிள் ஷாட் படம். அதாவது ஒரு இரவின் நிழல் என்ற பெயரில் ஒரு சிங்கிள் ஷாட் படம். உலகத்தில் ஒரு நாலே நாலு படம் தான் இந்த மாதிரி இருக்கிறது. சொல்லப்போனால் இந்த மாதிரி படம் ஆசியாவில் கிடையாது. சினிமாவில் வந்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. அதை தாண்டி ஒரு ஆர்வம்,ஆசை, கனவு தான். என் ரசிகர்களுக்காக புதுப் புது விஷயத்தை கொடுக்க வேண்டும். அதற்காக தான் நான் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.