அட, குட்டி தலைக்கு Football மீது இவ்வளவு ஆர்வமா – Chennayin Fc பகிர்ந்த அஜித் மகனின் புகைப்படம்

0
1702
Ajith
- Advertisement -

கால்பந்து அணியில் அஜித்தின் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் தங்கம் பதக்கங்களை வென்று இருக்கிறார். தற்போது அஜித் அவர்கள் பைக் ரைட்டில் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் அஜித் மகன் உடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து அணியில் சேர்ந்து இருக்கிறார். அந்த கால்பந்து அணி தொடர்பான ஜெர்சியை அவர் அணிந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

வைரலாகும் அஜித் மகன் புகைப்படம்:

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் புலிக்கு பொறந்தது பூனை ஆகுமா? என்று புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளை குவித்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது.

-விளம்பரம்-

ஏகே 62 படம்:

அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை பின் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் தலைப்பின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைத்து இருக்கிறார். கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement