அஜித்தின் திரை பயணத்திலேயே இன்று ஒரு ஸ்பெஷலான நாள். என்னனு பாருங்க.

0
2656
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். சினிமா உலகில் தனக்கென ஒரு பாதையை வழி வகுத்தவர் நடிகர் அஜித். கடந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அதோடு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து உருவாகி வருகிற படம் தான் “வலிமை”. தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரது நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படம் ரீமேக் படம், வேறொரு படத்தின் கதை என்று பல வதந்திகள் வந்தது. உண்மையாலுமே இந்த படம் இயக்குனர் வினோத் அவர்களின் சொந்த கதை என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வேறு எந்த தகவலும் இந்த படம் குறித்து வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில் ரசிகர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்கள். அது என்னவென்றால் இதுவரை நடித்த படங்களின் பட்டியலை வெளியீட்டு ஷேர் செய்து வருகிறார்கள். தல ரசிகர்கள் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியான படங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளார்கள். அதில் நேசம், தொடரும், தீனா, ரெட், பரமசிவம் போன்ற படங்கள் என பதிவிட்டு இருந்தார்கள். அதில் இப்போது கூட அதிகமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் “தீனா”. இந்த படத்தை அஜித் ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. தீனா படத்தில் அஜீத் அவர்கள் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் பாருங்க : துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரம் சிக்கி தவித்த அதர்வா. காரணம் இது தான்.

- Advertisement -

இந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் என கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா தான் இந்த வலிமை படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும், தல அஜித் அவர்கள் வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீப காலமாகவே அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களில் எல்லாம் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டலில் தான் தல நடித்து இருந்தார். ஆனால், இந்த வலிமை படத்தில் அஜித் அவர்கள் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் வருகிறார்கள். இந்த படத்தில் கார் ரேசிங் காட்சிகள் எடுப்பதற்கு ஹாலிவுட் கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement