இதுவரை யாரும் பார்த்திடாத அஜித்தின் டாக்டர் கெட்டப் போஸ்டர்..! இப்படி ஒரு படமா.!

0
162
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒரு சில படங்கள் அறிவிப்பு வெளியாகி பின்னர் கைவிடபட்ட கதைகள் பல உள்ளது. விஜய்யின் “யோகன் அத்யாயம் 1”, சிம்புவின் “ஏ சி, கெட்டவன் ” போன்ற படங்கள் அறிவிப்பு வெளியாகி பின்னர் கைவிடபட்டது.

Ajith

அந்த வகையில் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித்தும் விதிவிலக்கல்ல, நடிகர் அஜித் தவறவிட்ட படங்களில் பல ஹீரோக்கள் நடித்து அது சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. ஆனால், அஜித் படம் ஒன்று அறிவிப்புகள் வெளியாகி பின்னர் கைவிடபட்ட கதைகளும் இருக்கிறது.

- Advertisement -

தமிழில் அஜித் மற்றும் ஸ்னேகா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “ஜனா” படத்தை ஷஜி கைலாஸ் என்பவர் இயக்கி இருந்தார். இவர் “ஜனா ” படத்திற்கு முன்பாகவே அஜித்தை வைத்து “திருடா” என்ற படத்தை இயக்குவதாக இருந்தார்.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். “திருடா” படத்தில் நடிகர் அஜித் டாக்டர் கெட்டபில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. ஆனால், சில பல காரணத்தால் அந்த படம் கைவிடபட்டுள்ளது. இதோ “திருடா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Advertisement