பைக் ரிப்பர் செய்ய உதவி, ரோட்டுக்கு கடையில் டீ, அஜித்தின் பைக் ரைடில் நடந்த சுவாரசிய அனுபவத்தை பகிர்ந்த அதிர்ஷ்டசாலி ரசிகர்.

0
363
ajith
- Advertisement -

பைக் ரிப்பேர் ஆகி உதவி கேட்ட நபருக்கு மெக்கானிக்காக அஜித் மாறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது. சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். அதோடு பிரபல நடிகை உடன் அஜித் லடாக்கில் பைக் ரைடு செய்திருக்கும் வீடியோ, புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

அஜித்தின் பைக் ரைடு:

இப்படி அஜித் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அஜித் அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத், பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின் தரிசனம் செய்து முடித்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்தை இமயமலையில் சந்தித்தது தொடர்பாக மஞ்சு காஷ்யப்பா என்ற ஒருவர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

மஞ்சு காஷ்யப்பா பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, நான் ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கும். அதாவது, முதன்முறையான எனது பைக் பயணத்தில் டயர் காற்று குறைந்துவிட்டது. நான் உதவிக்காக யாரையாவது தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எனது கனவு பைக்கான bmw 1250GSA வண்டி என்னை கடந்து சென்றது. உடனே நான் அவரை நோக்கி கை அசைத்தேன். பின் நான் அவரிடம் ஏர் கம்ப்ரஸரைக் கேட்டேன். அதற்கு அவர் அது காரில் இருக்கிறது. கார் வருவதற்கு 10 நிமிடம் ஆகும் என்று சொன்னார்.

-விளம்பரம்-

மெக்கானிக்காக மாறிய அஜித்:

அதுவரை நான் அவருடன் பைக்கைப் பற்றி கொஞ்சம் பேசினேன். அப்போது அவர் உங்கள் பெயர் என்ன? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எண்னிடம் கேட்டார். பின் அவர், ஹாய் நான் அஜித், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று சொன்னார். எனக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித்தே இறங்கி என் வண்டியை சரி செய்ய உதவினார். பிறகு இரண்டு மணி நேரம் அவருடன் பைக் ரைடு செய்தேன். நான் அவரிடம் மீண்டும் சார் உங்களுடன் ஒரு தேநீர் அருந்துவது ஒரு பாக்கியம் என்று கேட்டேன். அதற்காக அவர் தனது வண்டியை நிறுத்தினார்.

அஜித் குறித்து சொன்னது:

அடுத்த டீக்கடையில் 10நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி எங்களுடன் டீக்கடையில் உரையாடி எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதை நான் பதிவிட்டதற்குக் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒன்று ஒரு லெஜண்ட் ஆக இருக்கும் ஒரு மனிதன். கொஞ்சம் கூட ஆட்டிடியூட் இல்லாமல் இருக்கிறார். அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டுள்ளார். நான் அதிர்ஷ்டசாலி. இந்த நாளை என்னால் முழுமையாக மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement