ஏகே 62 படத்திற்கு விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட 2 முக்கிய நிபந்தனைகள் – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
386
vignesh
- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் படத்திற்கு அஜித் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு அஜித்தின் வலிமை படம் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

தற்போது வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் எல்லாம் தற்போது மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அஜித்தின் ஏகே 61 படம் குறித்த அப்டேட்:

அதுமட்டும் இல்லாமல் இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் இந்த படத்தையும் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் திரைப்பயணம்:

இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் குறித்த அப்டேட் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் சில தினங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி, நானும் ரவுடிதான், தானாசேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி குறித்த தகவல்:

தற்போது விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருப்பது ரசிகர் மத்தியில் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. மேலும், விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடல் எழுதி இருக்கிறார். தற்போது இவர் அஜீத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தோசத்தை விக்னேஷ் சிவன் விடிய விடிய வெடி வைத்து கொண்டாடி இருந்தார்.

அஜித் வைத்த நிபந்தனைகள்:

இந்நிலையில் அஜித் அவர்கள் விக்னேஷ் சிவனை சமீபத்தில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவர் இந்த படம் குறித்து இரண்டு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, இந்த படத்தில் எந்தவிதமான அரசியல் வசனங்கள், அரசியல் கதாபாத்திரங்கள் இருக்கக்கூடாது. இரண்டாவது, இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தாலும் நிர்வாகத் தயாரிப்பு நிறுவனமாக விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் அஜித்தின் 62 வது படம் மூலம் விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று கோலிவுட் திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement