வீரம் படத்தின் போது 500 கி.மீ பைக் பயணம். நிஜ வாழ்க்கையில் பைக் ஓட்டும் அஜித்தின் அறிய வீடியோ. முதன் முறையாக வெளியிட்ட பைக் பார்ட்னர்.

0
1234
ajithbike

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பையும் தாண்டி கார் பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்பது அவரது ரசிகர்கள் அறிவார்கள். அஜித் படம் என்றாலே கார் அல்லது பைக் காட்சிகள் நிச்சயம் இடம்பிடித்துவிடும். அவ்வளவு ஏன் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தபோது, படத்தில் ஒரு பைக் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பைக் அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம். ஹைதராபாத் ஷெடியூல் முடிந்த பிறகு, சென்னைக்கு அந்த பைக்கிலையே தான் 650 கிலோமீட்டர் டிராவல் செய்து வந்தாராம் அஜித். அவருக்கென போடப்பட்டிருந்த விமான டிக்கெட்டை கூட கேன்சல் செய்ய சொல்லிட்டாராம் அஜித்.

ஆனால், ரசிகர்கள் யாரும் அஜித், சினிமாவை தவிர சாலையில் ரெஸ் பைக்கை ஒட்டிய ஒரு தெளிவான வீடீயோவை கண்டது இல்லை. இந்த நிலையில் ரசிகர்களின் இந்த குறையை தீர்த்து வைத்துள்ளார் அஜித்தின் பைக் பார்ட்னரும் வீரம் படத்தில் அஜித்திடம் தம்பியாக நடித்த நடிகருமான சுஹெயில் சந்தோக். கடந்த சில நாட்களாக இவர் அஜித்துடன் பைக்கில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இவர் முதன் முறையாக அஜித் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஒட்டிய அறிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த பதிவில், 2013 ஆம் ஆண்டு வீரம் படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும், இதில் 500 கி.மீ பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்ற வீடீயோக்களை அவர் பர்சனலாக வைத்துக்கொள்வார். ஆனால், அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் அதில் சிறு வீடீயோவை மட்டும் வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B_p7Mygnzo_/

கடந்த (மே 1-ஆம் தேதி) ‘தல’ அஜித்தின் பிறந்த நாள். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்தார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் இணைந்து நடித்த சுஹெயில் சந்தோக்கும் ட்விட்டரில் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லியிருந்தார். மேலும், அவர் போட்டிருந்த இன்னொரு பதிவில் “நானும் அஜித் சாரும் ஒரு முறை பைக் ரைடு போயிருந்தபோது வழியில் ஒரு டீ கடையில் நிறுத்தினோம்.

-விளம்பரம்-

அந்த டீ கடை வைத்திருக்கும் குடும்பத்தினர், அஜித் சாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். இருப்பினும், அவரிடம் அவர்கள் கேட்க தயங்கினார்கள். பின், அஜித் சாரே அவர்களிடம் தான் உங்களிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி என்னை போட்டோ எடுக்க சொன்னார். அதன் பிறகு அந்த போட்டோவை பிரிண்ட் போட்டு அவர்களிடம் கொடுத்தார் அஜித் சார்” என்று சஹெயில் சந்தோக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement