உங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது – ரசிகர்களிடத்தில் அஜித் சொன்ன விஷயம்.

0
449
ajith
- Advertisement -

தன்னுடைய ரசிகர்களுக்கு அஜித் வைத்திருக்கும் வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறாராம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டும் தான் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் எல்லாம் முடிவடைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் ரிலீஸ்:

துணிவு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு அஜித் கொடுத்திருக்கும் அட்வைஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அப்போது ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்திருந்தார்கள். இதில் சில ரசிகர்கள் தங்களுடைய மாற்றுத்திறனாளி நண்பருடன் அஜித்தை காண ஐந்து நாட்கள் ஆகவே சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கின்றார்கள். அதன்பின் அவருடைய வீட்டுக்கு செல்லும்போது அவர் காரை பின் தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

அஜித் கொடுத்த அட்வைஸ்:

இதனை கவனித்த அஜித் ரசிகர்களை வீட்டிற்கு அழைத்து விசாரித்து இருக்கிறார். அப்போது ரசிகர்களிடம் அஜித், சுவற்றில் ஏறி பார்க்கும்போது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் என்னாவது? காரை பின்தொடர்கிறீர்கள். இதனால் என்னுடைய ஓட்டுனர் காரை ஓட்டுவதில் சிரமம் அடைகிறார். விபத்து ஏதாவது நேர்ந்தால் அனைவருக்குமே கஷ்டம். இனிமேல் யாரும் இதுபோல செய்யாதீர்கள். உங்களிடம் சொல்வதை நான் சொன்னதாக நீங்கள் ரசிகர்களிடம் சொல்ல வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் என்று கூறியிருந்தார்.

Advertisement