படத்தின் உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவயானியும் – இயக்குனர் அகத்தியன் சீக்ரெட்.

0
975
kadhal

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்கள் காலம் கடந்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் உள்ள படம் தான் அஜித்தின் காதல் கோட்டை படம். இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அஜித் அவர்கள் நடிப்பில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான “காதல் கோட்டை” படத்தின் கிளைமாக்ஸ் வேற என்று கூறுகிறார் இயக்குனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

Aasai to Dheena: Films that made Ajith Kumar the Thala of Tamil cinema -  Movies News

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் தான் “காதல் கோட்டை”. மேலும்,இந்த படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தை சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரித்து உள்ளார்கள்.இந்த படத்திற்கு தேவா அவர்கள் இசையமைத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோ,ஹீரோயினும் ஒருவரைக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் காதலித்து வருவார்கள். பின் கடைசியில் இருவரும் சேர்வார்களா? சேர மாட்டார்களா? என்பது தான் கிளைமேக்ஸ். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கூட வாங்கி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தும், தேவயானியும் சேர்ந்து விடுவார்கள். ஆனால், படத்தின் உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவயானியும் கடைசி வரை சேரமாட்டார்கள். மேலும், இதற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு நெகட்டிவ் கிளைமாக்ஸ் எல்லாம் வேண்டாம், மாற்றிக் கொடுங்கள் என்று இயக்குனர் அகத்தியனிடம் கேட்டாராம்.

அகத்தியன்

அதனால் தான் கிளைமாக்ஸ் இருவரும் சேரும் படி வைத்தார்கள் என ஒரு பேட்டியில் இயக்குனர் கூறினார். ஆனால், இருவரும் சேரும் படி வைத்தால் தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆட்சி. ஆனால்,இருவரும் பிரிந்து இருந்தால் படம் ஹிட்டா இருக்குமா? என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement