கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்து உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33000 தாண்டியது மற்றும் பலியாகும் எண்ணிக்கையும் 1000க்கு மேல் தாண்டியது. இதனால் ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஏழை மக்கள், தினந்தோறும் கூலி வேலை செய்யும் மக்கள் என பல பேர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். மேலும், ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள்,போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதனால் பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிரந்து வருகிறார்கள். அதோடு இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதிலும் பல பேர் உடற்பயிற்சி செய்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படியும் உடற்பயிற்சி செய்யலாம் என்ற வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஊரடங்கு சமயத்தில் நடிகை ஷிவானி அவர்கள் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார்.
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் நடனம் ஆடி உள்ளார். இதை பார்த்து பலரும் இப்படியும் உடற் பயிற்சி செய்யலாம் என்று கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலம் ஆனார். அதன் பின் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். என்ன தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.