துப்பாக்கி படத்தில் முதலில் விஜய்க்கு பதிலாக இந்த அதிரடி ஹீரோதான் நடிக்க இருந்தாராம் !

0
1169
Thuppaki movie

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் தரமான படங்களில் நடித்துவந்தார்.அந்த வருசையில் 2012 இல் ஏ. ஆர். முருக தாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படம் விஜய்க்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

vijays-thuppakki

அதுவரை சட்டைக்கு மேல் சட்டை போட்டுக் கொண்டு பஞ்ச் வசங்களை பேசி வந்த விஜயை முதலில் மாற்றியது காவலன் படத்தில் தான்.அதன் பின்னர் ஏ. ஆர். முருகதாஸ் விஜய்யை ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக துப்பாக்கி படத்தின் மூலம் மாற்றினார்.மேலும் பல முன்னனி ஹீரோக்கள் தவறவிட்ட படத்தை விஜய் நடித்து அந்த படங்கள் படு ஹிட் ஆகின.

அது போலவே துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு பாலிவுட் நடிகர் ஆக்ஷேய் குமாருக்கு தான் கிடைத்ததாம்.அப்போது துப்பாக்கி கதையை கேட்டு ஓகே சொன்ன அக்ஷய் குமார் பின்னர் சில நாட்கள் கழித்து ஒரு சில காரணங்களால் அந்த படம் தள்ளிக்கொண்டு போனதாம்.அதன் பின்னர் விஜயிடம் அந்த கதையை கூறி ஓகே செய்த முருகதாஸ் அந்த படத்தை முதலில் தமிழில் விஜயை வைத்து முடித்து விடுகிறேன் என்று ஆக்ஷேய் குமரிடம் கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிக்கவே துப்பாக்கி படத்தை விஜயை வைத்து முதலில் தமிழில் எடுத்து முடித்தார்.

Akshai kumar

அந்த படம் தமிழில் ஹிட்டாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது அதற்கும் பிறகு 2 ஆண்டுகள் கழித்தே துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஆக்க்ஷேய் குமாரை வைத்து 2014 ஆம் ஆண்டு ஹாலிடே என்ற பெயரில் எடுத்தார் ஏ. ஆர். முருகதாஸ்.