அக்காவை மிஞ்சிய தங்கை. பொது நிகழ்ச்சிக்கு படு கிளாமர் உடையில் சென்ற அக்ஷரா ஹாசன்.

0
96436
Akshara-hassan
- Advertisement -

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஸ்ருதி ஹாசன் போலவே அவரது தங்கையான அக்ஷரா ஹாசனும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

- Advertisement -

அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் இயங்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது. இறுதியாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய் நடிப்பில் மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்ஷரா.மேலும் , பிங்கர் டிப் என்ற வெப் சீரிஸ் தொடரிலும் நடித்தார் அக்ஷரா.

இதையும் பாருங்க : ஆஸ்கார் லிஸ்டில் வந்த என்னுடைய படம் உங்கள் லிஸ்டில் கூட இல்லை. வைரலாகும் பார்த்திபனின் பேச்சு – வீடியோ இதோ.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அது ஒரு குறும் படத்திற்காக எடுத்த புகைப்படம் என்றும் அதனை வேண்டுமென்றே யாரோ வெளியிட்டுவிட்டனர் என்றும் கூறினார் அக்ஷரா. இதையடுத்து நடிகை அக்ஷரா ஹாசன் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் அக்ஷராவின் முன்னாள் காதலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், பின்னர் அவரும் தான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் சமீபத்தில் கிளாமர் அண்ட் ஸ்டைல் என்ற பெயரில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியான உடையில் சென்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.இவரது அக்கா ஸ்ருதி தான் பொது நிகழ்ச்சிகளுக்கு கிளாமராக செல்வார் என்றால் தற்போது அக்காவை மிஞ்சிய அக்ஷரா கிளாமரில் ஸ்ருதியை ஓவர் டேக் செய்து இருக்கிறார்.

Advertisement