ஆஸ்கார் லிஸ்டில் வந்த என்னுடைய படம் உங்கள் லிஸ்டில் கூட இல்லை. வைரலாகும் பார்த்திபனின் பேச்சு – வீடியோ இதோ.

0
92532
parthiban
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகர் பார்த்திபன். இது மட்டும் இல்லைங்க இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும் உருவாக்கியவர். இவர் சினிமா உலகில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணியாற் இருந்தனர்.

-விளம்பரம்-

Kandipa vikatan itha telecast panna mattanga, watch this mass speech by Radhakrishnan Parthiban sir. Well said sir. ????????

Karthi Prasanna ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಜನವರಿ 11, 2020

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருந்தார். இந்த படம் திரில்லிங், திகில், காமெடி கலந்த கலவையாகஉருவானது. மேலும், ஒரு சாதாரண நடுத்தர மனிதனின் எதார்த்தமான வாழ்க்கையை காட்டும் படமாக இருந்த “ஒத்த செருப்பு அளவு7” படம் இதுவரை யாரும் காணாத ஒரு படமாக அமைத்திருந்தது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் பாருங்க : 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத மெட்டி ஒலி சாந்தியா இது. இப்போ எப்படி இருக்கார் ?வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

சமீபத்தில் தான் ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு ”வி அவார்ட்ஸ்” வழங்கி இருந்தார்கள்.மேலும், இவர் ஒத்த செருப்பு படத்தின் விருதை வாங்க நடிகர் பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (ஷூ) அணிந்து சென்றார். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை நடத்திய விருது வழங்கும் விழாவில் நடிகர் பார்த்திபனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒத்த செருப்பு படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்று பார்த்திபன் தனது மன வருத்தத்தை ட்விட்டரில் தெரிவிதித்திருந்தார்.

-விளம்பரம்-

அதில், 2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டேன். ரசிகர்களின் கைத்தட்டலை மீறிய விருதில்லை காசை குடுத்து படத்தை பாராட்டும் ரசிகர்களே கொண்டாடிய பிறகு, விகடன் Special mention என்ற விருதாய் இல்லாமல் Insult செய்வதாய் இருந்தது.இனி வாழ்நாளில் உங்கள் விருதே வேண்டாம் ஒரு கலைஞனின்ஆதங்கம்,விருதின் மீது அவனின் மரியாதை என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் விருது மேடையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆஸ்கார் லிஸ்டில் வந்த என்னுடைய படம் உங்கள் லிஸ்டில் கூட இல்லை என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார் பார்த்திபன்.

Advertisement