திரிஷாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவரை லியோ படத்திலிருந்து அவரை வெளி ஏற்றுங்கள் என்று ஏ.எல்.சூர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், நடிகை திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் ஒரு அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா. தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
திரிஷா திரைப்பயணம்:
அந்த வகையில் கடந்த ஆண்டு திரிஷா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு இன்னும் ரசிகர் கூட்டம் உருவானது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து சமீபத்தில் வெளியாகி இருந்த ராங்கி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
லியோ படம்:
தற்போது திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா விஜய் உடன் படத்தில் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே திரிஷா- விஜய் இருவரும் இணைந்து கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்கள்.
ஏ.எல்.சூர்யா அளித்த பேட்டி:
தற்போது லியோ படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் திரிஷாவின் திருமணம் குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏ எல் சூர்யா என்பவர் தற்போது பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், திரிஷாவை லியோ படத்திலிருந்து வெளியேற்றுங்கள். காரணம், நான் அவரை காதலித்து வருகிறேன். எனக்கும் திரிஷாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறுகிறது. விஜய்க்கு என் மீது பொறாமை இருக்கிறது.
திரிஷா திருமணம் குறித்து சொன்னது:
நானும் திரிஷா மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆகவே திரிஷாவை லியோ படத்தின் படபிடிப்பிலிருந்து வெளியேற்றுங்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி ஏ எல் சூர்யா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை. ஏஎல் சூர்யா என்பவர் இசையமைப்பாளர், இயக்குனர் என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஏஎல் சூர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சிலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.