சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ராணி. சீரியல் வில்லி என்றாலே இவரைத் தான் எல்லோருமே சொல்வார்கள். அந்தளவிற்கு இவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்தி இருப்பார். சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிரபல சீரியல்களில் தான் இவர் நடித்து இருந்தார். இவர் முதன்முதலாக அலைகள் என்ற தொடரின் மூலம் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதனைத் தொடர்ந்துகுறிப்பாக பயணம், அத்திப்பூக்கள், வள்ளி, போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். பெரும்பாலும் இவர் வில்லியாக தான் நடித்திருக்கிறார். தற்போது இவர் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தாயம்மா குடும்பத்தார் என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராணி, நான் சின்ன வயதிலிருந்தே நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நடிகை ராணி பேட்டி:
கிட்டத்தட்ட 22 வருடங்களாக மீடியாவில் தான் இருக்கிறேன். பெரிய கேப் என்று எதுவும் எனக்கு கிடைப்பதில்லை. நெகட்டிவ் கதாபாத்திரத்தின் மூலம் தான் எனக்கு பாசிட்டிவ்வான ரிவியூ, பணம், புகழ் என்று எல்லாமே கிடைத்தது. நான் ரொம்ப ரசிச்சி தான் அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் நான் இதுவரைக்கும் எந்த சீரியலில் இருந்தும் விலகியதே கிடையாது.

மீடியா குறித்து சொன்னது:
அதே மாதிரி நான் நடித்த தொடர்கள் எல்லாமே கிட்டத்தட்ட நான்கு, ஐந்து வருடத்திற்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. சமீபத்தில் நான் ஒரு சீரியல் இருந்து விலகிவிட்டேன். காரணம், அந்த சீரியல் லேட் நைட் ஒர்க் பண்ண சொன்னார்கள். அது கூட ஓகே. ஆனால், அவர்கள் அதை சொன்ன விதம் எனக்கு ரொம்ப இன்சல்ட் ஆக இருந்தது. நான் ரெகுலராக இத்தனை வருஷமாக ஃபீல்டில் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். சொல்வதற்கு ஒரு முறை என்று இருக்கு.
சீரியல் அனுபவம் குறித்து சொன்னது:
ஒரு பொண்ணா, ஹவுஸ் வைஃப் ஆக எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்குமோ? அந்த அளவிற்கு வொர்க் பண்ண வருகிறோம். ஆண்கள் கொஞ்சமாவது அதை புரிந்து கொண்டு அவர்களுக்கு மரியாதை கொடுங்க.
ஆனால், அவர்கள் மரியாதை கொடுக்க மாட்டுகிறார்கள். ஈகோ பார்க்கிறார்கள். எப்படியாவது கீழே போட்டு மிதிக்கணும் என்று நினைக்கிறார்கள். எனக்கு சுயமரியாதை இருக்கு. அவங்க இன்சல்ட் பண்ணி பேசுனது எனக்கு பிடிக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=YjrW6ahl9YY
சீரியலில் விலக காரணம்:
அதனால் தான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன். இத்தனை வருஷம் ஃபீல்டில் இருக்கிற என்னையே இப்படி பேசுகிறார்கள் என்றால், புதிதாக வருபவர்களை எல்லாம் எப்படி நடத்துவார்கள்? என்ன பேசுவார்கள்? இத்தனை வருட பயணத்தில் நான் இந்த மாதிரி எப்பவுமே சந்தித்தது கிடையாது. அந்த செயல் என்னை ரொம்ப காயப்படுத்தி இருந்தது என்று அவர் எமோஷனலாக பேசியிருந்தது தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.






