அந்த வயதில் இருந்தே ரன்பீரை பிடிக்கும், தன்னை விட 10 வயது பெரிய ரன்பீரை திருமணம் செய்தது குறித்து மனம் திறந்த ஆல்யா.

0
616
alia
- Advertisement -

ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் எல்லாம் என்னுடைய தோழிகள் என்று ஆலியா பட் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தி திரையுலகில் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர்- நடிகை ஆலியா பட். இவர்கள் இருவருமே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ரன்பீர் கபூர் அவர்கள் நடிகை தீபிகா படுகோனேயை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் கத்ரீனா கைஃப்பை பல ஆண்டுகள் காதலித்தார். ஆனால், எந்தக் காதலும் ரன்பீர் கபூருக்குக் கைகூடவில்லை. மேலும், ரன்பீர் கபூர் காதலித்த இரண்டு பெண்களுமே வேறு ஒரு நடிகரை காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். பின் ரன்பீர் கபூர் ஆலியா பட்டை காதலிப்பதாக கூறி இருந்தார். ஆனால், அதற்கு முன்பே நடிகை ஆலியா பட் தனக்கு 11 வயதிலிருந்தே ரன்பீர் கபூரைப் பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இவர்கள் இருவர் குறித்த காதல் கிசுகிசுகள் சோசியல் மீடியாவில் வைரலானது.

- Advertisement -

இதையும் பாருங்க : “இன்று தமிழக அரசு கொண்டுவரும் பல நலத்திட்டங்கள் சோழர்கள் கொண்டுவந்தது தான்’ பொன்னியின் செல்வன் பட முக்கிய நடிகரின் பேச்சு.

ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்:

பின் இருவரும் பகிரங்கமாக காதலிப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். அனைவரும் எதிர்பார்த்த இவர்களின் திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்று இருந்தது. இவர்களுடைய திருமணம் மும்பையில் தொடங்கியது. இயக்குனரும், ஆலியா பட்டை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்தவருமான கரன் ஜோகர் தான் ஆலியா பட்டின் மருதாணி சடங்கை தொடங்கி இருந்தார். இவர்களுடைய திருமணத்தில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், சகோதரிகள் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆலியா பட் கர்ப்பம்:

மேலும், இவர்களுடைய திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாமே சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி இருந்தது. இதனை பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பது குறித்து சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் தன் கணவரின் முன்னாள் காதலிகள் குறித்து ஆலியா பட் கூறி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

காபி வித் கரன் நிகழ்ச்சி:

பாலிவுட்டில் கரன் ஜோகரின் பிரபலமான டாக் ஷோ காபி வித் கரன். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பப்படாது என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சி திரும்ப ஒளிபரப்ப போகிறார்கள். அதாவது காபி வித் கரன் நிகழ்ச்சியின் புதிய சீசன் புதிய வடிவத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் தற்போது காபி வித் கரன் 7 நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பட்டு இருக்கிறது. இதில் ஆலியாவும், ரன்வீர் சிங்கும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்கள்.

ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள்:

எபிசோடில் பல கேள்விகள்கேட்கப்பட்டது. அப்போது அவரிடம் உங்களுடைய கணவர் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் குறித்து கூறுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு ஆலியா கூறியது, எனது கணவரின் முன்னாள் காதலியுடன் எப்படி நட்புடன் இருப்பது என்று எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கும் இருவரையும் பிடிக்கும் என்று அவர்களுடைய பெயர்களை ஆலியா குறிப்பிட வில்லை. இருந்தாலும் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலி தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைப் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement