அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தளார் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார்.

இவர் முதலில் இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
அட்லீ குறித்த தகவல் :
கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதை அடுத்து இவர் முதன் முதலில் ஹிந்தி படத்தை தயாரித்திருந்தார். தமிழில் அட்லீ இயக்கி, தளபதி விஜய் நடித்து பயங்கர ஹிட்டான ‘தெறி’ படத்தினுடைய இந்தி ரீமேக்கை தான் தயாரித்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து அட்லீ அவர்கள் பாலிவுட்டிலேயே படத்தை இயக்கியிருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது.

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் அட்லீ, அல்லு அர்ஜுனனை வைத்து படம் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்புமே அட்லீ வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது இது தொடர்பாக தான் தகவல் வெளியாகி இருக்கிறது. பீரியட் கதையை கொண்ட இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை 'Lola VFX' நிறுவனம் தான் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் அவெஞ்சர்ஸ், கேப்டன் மார்வெல் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றி இருந்தார்கள். மேலும், இந்த நிறுவனத்தினுடைய கிராபிக்ஸ் இயக்குநர் மேம்ஸ் மடிகன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், நான் இப்போதுதான் படத்தினுடைய முழு கதையும் படித்தேன். ஆனால், இன்னும் எனக்கு தலை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறி இருந்தார். இவரை அடுத்து இந்த நிறுவனத்தின் ஸ்பெஷல் மோஷன் துறையைச் சேர்ந்த மைக் எலிசால்ட், உண்மையாகவே இந்த படத்தின் கதை அற்புதமாக இருக்கிறது.
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
Lola VFX நிறுவனம் சொன்னது:
இதற்கு முன்பு நான் இந்த மாதிரியான கதையை பார்க்கவே இல்லை. நான் சிறந்த விஷயங்களை இந்த படத்திற்கு செய்து காட்ட வேண்டும் என்று கூறி இருந்தார். இவரைத் தொடர்ந்து Fractured FX துறையின் தலைமை செயல் அதிகாரி, இந்த படத்தினுடைய கதை படிக்கும் போதே கதாபாத்திரங்களின் திறன்கள் எனக்கு ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். பின் Lola VFX நிறுவனத்தின் இணை உரிமையாளர் வில்லியம் ரைட் ஆண்டர்சன், இயக்குனரின் விஷன் எப்படி எல்லாம் ஏற்படுத்தப் போகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. படத்தின் கதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






