வாழ்க்கையில் சோகம் , தற்கொலைக்கு முயன்ற அல்போன்சாவின் தற்போதைய நிலை ?

0
2436
Axctress-alphonsa-now

90 மற்றும் 2000த்தில் முன்னணி ஐட்டம் டான்சராக வலம் வந்தவர் நடிகை அல்போன்சா. 1995ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, படத்தில் வரும் ‘ரா, ரா, ரா… ராமையா..’ பாடலில் ஐட்டம் டான்சராக அறிமுகம் ஆனார். அதிலிருந்து பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிப்பதுடன் பெப்பி சாங்கிற்கு டான்சும் ஆடி வந்தார்.

Actress-Alphonsa

இவர் சென்னையை சேர்ந்தவர். பிரபல நடன பயிற்சியாளர் ராபர்ட் மாஸ்டரின் உடன் பிறந்த சகோதரி ஆவார். கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்ச தந்திரம் படத்தில் சைடு ரோல் பண்ணியிருப்பார் அல்போன்சா. தமிழில் சேரன் சோழன் பாண்டியன், தாயின் மணிக்கொடி, பெரிய மனுஷன், சிவன் போன்ற படங்களில் நடித்துள்ளார் அல்போன்சா.

மேலும் தில், பத்ரி, காதல் சடுகுடு ஆகிய படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் அல்போன்சா.

Alphonsa Actress

அதன்பின்னர் நடிகர் வினோத்துடன் அல்போன்சாவிற்கு காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பல ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். கவசம் என்ற படத்தில் நடிகர் வினோத் நடித்து வந்தார். பண பிரச்சனையால் இந்த படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 2012ல் தற்கொலை செய்துகொண்டார்.

alphonsa

வினோத்தின் பிரிவை தங்க முடியாத அல்போன்ஸா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானர். எந்த வேலையும் செய்யாமல் இருந்தார். இதனால் 2015ஆம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் நூலியைல் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது அவரது 8 வயது மகளுடன் வசித்து வருகிறார் அல்போன்சா.