தங்கள் வாரிசையும் சீரியலில் களம் இறக்கிய சஞ்சீவ் ஆலியா – அதுவும் எந்த தொடரில் பாருங்கள்

0
951
alyamanasa
- Advertisement -

ஆலியா மானசா- சஞ்சீவியின் மகள் ஐலா பிரபல சீரியலில் நடித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வந்தார்.

- Advertisement -

சஞ்சீவ் நடிக்கும் சீரியல்:

அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்து வந்தார். இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் ஆல்யா தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், விரைவில் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் சீரியலில் இருந்து விலகிவிட்டார். மேலும், இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் அவ்வப்போது அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆலியா நடிக்கும் சீரியல்:

தற்போது ஆலியா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். சரிகம புரொடக்ஷன் இந்த சீரியலை தயாரிக்கிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி இவர்கள் இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தங்களுடைய குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவு செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஐலா பிறந்தநாள்:

அந்த வகையில் சமீபத்தில் தான் தங்களுடைய மகள் ஐலாவின் மூன்றாவது பிறந்த நாளை ஆலியா-சஞ்சீவ் இருவரும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். அந்த வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் சஞ்சீவ் மகள் தொடரில் நடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

ஐலா நடிக்கும் சீரியல்:

அதாவது,சஞ்சீவ் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஒரு காட்சிக்காக ஐலா நடித்திருக்கிறார். ஐலா முதன்முதலாக நடித்திருக்கும் அந்த காட்சி வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement