ஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸின் திருமணம். பெண் யார் தெரியுமா ? அதுவும் காதல் திருமணமாம்.

0
58525
alya-manasa
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ‘ராஜா ராணி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான வரலாற்றில் வெற்றிகரமான சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று எனவும் கூறலாம். இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஆல்யா மானஸா.

-விளம்பரம்-

ஆல்யா மானஸா, சமீபத்தில் தான் இதே தொடரில் நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆல்யா மானஸா ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானஸா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவரார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ரஜினிகாந்தை தொடர்ந்து மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் சூப்பர் ஸ்டார் பட நடிகை.

அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார். மேலும், மானஸ் என்று தனது காதலனின் பெயரை பச்சை குத்திக்கொண்டும் இருந்தார் ஆல்யா. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது காதல் பின்னர் முறிவடைந்தது. ஆனால், மானஸா சஞ்சீவை காதலிப்பதற்கு முன்பே தனது இரண்டாவது காதலை தொடங்கி இருந்தார் மானஸ். நடன இயக்குனராக இருந்து வரும் மானஸ் தன்னிடம் நடனம் பயின்று வரும் சுபீக்ஷ என்பவரை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டு ஆன நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சமீபத்தில் சுபிக்க்ஷா திருமண நலங்கு நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement