ரஜினிகாந்தை தொடர்ந்து மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் சூப்பர் ஸ்டார் பட நடிகை.

0
1674
man-vs-wild
- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும் காடுகளில் கிடைத்ததை உண்டு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற யுத்தியை இந்த நிகழ்ச்சியில் சொல்லி தருகிறார்கள். அதே போல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Image result for deepika padukone in kochadaiyaan"

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான ஒபாமா கூட கலந்து கொண்டார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் கூட இந்திய பிரதமர் மோடி அவர்கள் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஷங்கர் மஹாதேவன் பையனாக இருந்தாலும், இதுக்கு முன்னாடி சீரோ தான் – இமான் பேச்சு.

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு “தர்பார்” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான உடன் ரஜினி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு மைசூர் மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்றது.

-விளம்பரம்-
deepika padukone in kochadaiyaan"

மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியின் ஷூட்டிங் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு லேசாக காயம் ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்தது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திலும், ரஜினிகாந்த் உடல்நலம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஆனால், இது பொய்யான தகவல் என்றும் ரஜினி படப்பிடிப்பை முடித்துவிட்டு நல்லபடியாக சென்னை வந்து ரஜினி பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினார். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் தனித்தனியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Image result for deepika padukone in man vs wild"

இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளனர். நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியை குறித்து பரபரப்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். தீபிகா படுகோன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் வெளியான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை இந்த செய்தி உண்மை என்றபட்சத்தில் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகாபடுகோன் பெறுவார்.

Advertisement