வளைகாப்பு மூலம் ஒருவழியாக மகளுடன் ஒன்று சேர்ந்த ஆல்யாவின் அம்மா. வைரலாகும் புகைப்படங்கள்.

0
107596
sanjeev
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இருந்தது. இந்த தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக திகழ்ந்து வந்தார்கள். அதையும் தாண்டி இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியை நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-
ஆல்யா - சஞ்சீவ்

- Advertisement -

இந்த திடீர் திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ் “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை. எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம் மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆல்யா மானஸா கழுத்தில் இஸ்லாம் மதத்தில் அணியும் தாலியும் இருக்கிறது. சஞ்சீவின் நிஜப்பெயர் “syed Azharuddin Buhari” என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய போட்டு. ஆளே மாறியுள்ள பாவனா. மிரட்டலான லுக் இதோ.

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்து இத்தனை மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், ஆல்யா வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்பதால் அவரது பெற்றோர்கள் ஆல்யாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் அவரது தந்தை மட்டும் ஆல்யா-சஞ்சீவிடம் பேசி வந்தார்.

-விளம்பரம்-
அழைப்பிதழ்

ஆனால், அவரது அம்மா பேசுவது இல்லை இதுகுறித்த கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேட்டியில் பேசி இருந்த சஞ்சீவ், அவரது அப்பா பேசுவதால் தற்போது எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கூடியிருக்கிறது எனவே நிச்சயம் என்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்து ஆல்யாவை ஆசீர்வாதம் செய்வார் என்று நம்புகிறேன். பேரனோ, பேத்தியோ தன்னுடைய குழந்தையை முதலில் தனது அம்மாவின் கையில் தான் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.

குடும்பத்தினருடன் ஆல்யா

இந்த நிலையில் ஆல்யா மானஸா ஆசை பட்டது போலவே அவரது தாயும் பேசி விட்டார். ஆல்யா மானஸாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு சிம்பிளாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களையும் விடீயோக்களையும் சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வளைகாப்பு நிகழ்ச்சி மூலம் ஆல்யா மானசாவின் அம்மா தனது மகளுடன் பேசி விட்டார். எனவே, ஆல்யா மானசா ஆசை பட்டது போல அவருக்கு பிறக்கும் குழந்தையை முதலில் அவரது தாயே முதலில் கையில் ஏந்துவர் என்று வாழ்த்துவோம்.

Advertisement