ராஜா ராணி 2 சீரியலில் தற்காலிக சந்தியாவாக என்ட்ரி கொடுத்திருக்கும் – இவர் யாருன்னு தெரியுமா?

0
682
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க போகும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சீரியலில் ஆல்யா விலக காரணம்:

இதனிடையே இவர்கள் இருவருமே எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அடிக்கடி தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சோசியல் மீடியாவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். இப்படி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தற்போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார் ஆல்யா. அதே போல ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகப்போபவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

சந்தியா ரோலில் நடிக்கும் நடிகை:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஸா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, ராஜா ராணி 2வில் இருந்து விலக எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான். அது இந்த ஆல்யா மட்டும் தான் என்று பதில் அளித்துள்ளர். இதன் மூலம் ராஜா ராணி 2 வில் இருந்து ஆல்யா எப்போதும் விலக மாட்டார் என்பது உறுதியாகி ஆனால், ஆல்யா மானஸாவிற்கு இந்த மாதம் குழந்தை பெற இருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஆல்யாவிற்கு பதிலாக வேறு ஒருவர் தற்கமாக நடிக்க வந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ரியா விஸ்வநாதன் பற்றிய தகவல்:

அவர் பெயர் ரியா விஸ்வநாதன். இவர் தான் இந்த தொடரில் சந்தியாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ரியா விசுவநாதன் யார்? அவரைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இவர் சின்னத்திரை சீரியலுக்கு புதியவர். இவர் சென்னையை சேர்ந்த மாடல். இந்த தொடரின் மூலம் தான் இவர் சீரியலுக்கு அறிமுகமாக இருக்கிறார். மேலும், பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் தான் ரியா. அதோடு ஆலியா மானசா இந்த சீரியலில் இருந்து விலகியது தற்காலிகமான ஒன்று தான்.

ராஜா ராணி சீரியலின் கதை:

அவர் மீண்டும் கண்டிப்பாக சீரியலில் இணைவார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் சிலகாலம் ரியா நடிக்க இருக்கிறார். தற்போது சீரியலில் சரவணன் எப்படியாவது தன்னுடைய மனைவி சந்தியாவை போலீசாக வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தற்போது ரியா பொருத்தமாக இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்து இருப்பதாக சீரியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொடரின் மூலம் ரியா மக்கள் மத்தியில் இடம் பிடிப்பாரா? பல தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம்.

Advertisement