மேனேஜருடன் தொடர்பா..!அமலா பால் கொடுத்த விளக்கம்..!

0
1046
amala
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஷ்ணு மற்றும் அமலா பால் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது. 

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் இணைந்து நடித்த ‘ராட்சசன் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால், இது என்ன ஆதாரமற்ற செய்தி. எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதனால் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அமலா பால்,தனது மேனஜர் பிரதீப் குமார் என்பவருடன் தொடர்பில் இருப்பதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இதுகுறித்து உடனடியாக விளக்கமளித்துள்ளார் நடிகை அமலா பால்.

-விளம்பரம்-

நடிகை அமல் பால் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், என்னை பற்றியும் என்னுடைய மேலாளர் பற்றியும் தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. அவர் என்னுடைய மேலாளர் மட்டும் தான் மற்றும் என்னுடைய தேதிகளை பார்த்துக்கொள்பவர் மட்டுமே என்று கூறியுள்ளார். 

Advertisement