இந்த நோயினால் தான் அமலா பாலின் தந்தை இறந்தாராம். இறப்பதற்கு முன்பாகவே அமலா பாலே அளித்த பேட்டி.

0
33322
Amala-paul
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனை, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி, தளபதி விஜயுடன் தலைவா என தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for amala paul father"

- Advertisement -

கடந்த ஆண்டு இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பார்த்து பலர் பாராட்டியும் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. சமீபத்தில் இவரது தந்தை மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால், அமலா பாலின் தந்தை எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது அமலா பால் அளித்த பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.

இதையும் பாருங்க : அரை நிர்வாண காட்சியில் நடிக்க ஒரு வாரம் யோசித்தேன். ஆனால், இயக்குனர் அதை சொன்னதால் ஒப்புக்கொண்டேன்- நடிகை சிருஷ்டி.

அமலா பாலின் தந்தை இறப்பதற்கு முன்பாக அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையின் இறப்பை எதிர் நோக்கி பயம் கொண்டு இருப்பதாக பேசியுள்ளார். அதில், என்னுடைய அப்பாவிற்கு 4 ஆம் நிலை புற்றுநோய் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் பெற்றோர்களிடம் கலந்து பேச மாட்டேன். ஆனால், அவர்கள் என்னை நம்புவார்கள். ஆடை படத்தின் போது கூட அவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்த படத்தின் டீசரை அவரிடம் காட்டிய போது ‘நல்லா இருக்கிறது’ என்று சொன்னார். ஆனால், என் அம்மாவிடம், அமலா எதாவது செய்தால் அது சரியாக தான் இருக்கும் என்று சொன்னார் என்று தனது தந்தை குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:30 மற்றும் 11:53 நிமிடத்தில் பார்க்கவும்

மேலும், அந்த பேட்டியில் நீங்கள் மிகவும் பயந்த ஒரு தருணம் குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, என்னுடைய தந்தைக்கு 4 ஆம் நிலை புற்று நோய் இருக்கிறது. அவர் எங்களை விட்டு செல்லப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் போகும் போது எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட்டு தான் செல்கிறார். இரவு நேரத்திலோ, விடியற்காலையிலோ என் அம்மாவிடம் இருந்து எனக்கு போன் வந்தால் இறப்பாக இருக்குமோ என்ற பயம் தான் தோன்றும். என்னை பொறுத்தவரை ஒரு படம் போய்விட்டது என்றாலோ என் தொழில் பாதிப்பு என்றாலோ சிதைந்து போக மாட்டேன். வாழ்க்கையில் ஏதாவது நடந்தால் தான் சிதைந்து போவேன். ஆனால், தற்போது நான் அனைத்தையும் சமாதானம் செய்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருவர் இருந்தாலும் ஓகே, போனாலும் ஓகே என்று கூறியுள்ளார் அமலா பால்.

Advertisement