ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே நான் தான் நம்பர் 1 நடிகை. என்கிட்டயே விளையாட்றயா – வைரலாகும் அமலா பாலின் வீடியோ.

0
1928
amalapaul

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.

மேலும், இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது நடிகை அமலா பால் அவர்கள் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார்.

இதையும் பாருங்க : இந்த ரணகலத்திலும் கணவருடன் லிப் லாக். புகைப்படத்தை கண்டு கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஒட்டு மொத்த தென்னிந்தியாவிலேயே நான் தான் நம்பர் 1 நடிகை என்று அமலா பால் பெருமை பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அமலா பாலை யாரோ சிரித்துகொண்டே வீடியோ எடுக்கின்றனர். அதற்கு அமலா பால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே நான் தன நம்பர் ஒன் நடிகை என்னிடம் எப்படி விளையாடுகிறாயா கொஞ்சம் நிறுத்து என்று கூறுகிறார் அமலாபால்

சமீபத்தில் தான் ரசிகர் ஒருவருக்கு நடிகை அமலா பால் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது . அந்த வீடியோவில் அந்த ரசிகர் அமலா பால் நடித்த விஐபி 2 படத்தை நாளை பாருங்க, என்னுடைய சிறந்த நடிகை அமலா பால் என்று கூறுகிறார். அவர் பேசி முடித்ததும் சந்தோஷத்தில் அமலா பால் அந்த ரசிகருக்கு முத்தம் கொடுக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement