குடியுரிமை சட்ட போராட்டம் குறித்து அமலா பால் பதிவிட்ட புகைப்படம். வாழ்த்தும் ரசிகர்கள்.

0
6677
Amala-paul
- Advertisement -

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி. இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கொந்தளிப்பு. குடியுரிமை சட்ட திருத்தம் கண்டித்து பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் தீவிர போராட்டம். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நிறைவேற்றியது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடை பெற்று வருகின்றது.

-விளம்பரம்-
amala paul

- Advertisement -

பின் வட மாநிலங்கள் முழுவதும் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களின் போராட்டம் தீவிரமாக மாறியது. போராட்டத்தினால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் குற்றம் சாட்டினார்கள். ஆனால், மாணவர்கள் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்கள். இருந்தாலும், போலீசார் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்களை தாக்கினார்கள்.

இதையும் பாருங்க : நடிகர் லாரன்ஸ்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா. லாரன்ஸின் குடும்ப புகைப்படம் இதோ.

இதுவரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் பல்வேறு நபர்கள் இறந்துள்ளார்கள். நாடு முழுவதும் தீ பற்றி எரியும் இந்த பிரச்சனை குறித்து பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சின்ஹா நிலையில் தென்னிந்திய நடிகையான அமலா பால் குடியுரிமை குறித்த ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் சமூக வளைத்த பக்கத்தில் ஸ்டேட்ஸ்சாக வைத்து உள்ளார்.

-விளம்பரம்-
 caa protest

அந்த புகைப்படத்தில் முஸ்லீம், இந்து, புத்திசம், சீக், கிறிஸ்டின் என்று பல்வேறு மதங்களை குறிப்பிட்டு அதில் இந்தியா என்ற வார்த்தை மட்டும் ஹைலைட் செய்யபட்டுள்ள பதாகை ஒன்றை ஏந்தி இருக்கும் ஒரு பெண் இருக்கிறார். இந்த புகைப்படத்தின் மூலம் மதங்களால் வேறு பட்டாலும் நாம் இந்தியர்கள் என்று அமலா பால் சூசகமாக தெரிவித்துள்ளார். அம்லா பாலின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement