லாரில ராமதாஸ் என்ற அந்த பெயரை பார்த்ததும் – பருத்திவீரன் காட்சி குறித்து அமீர் சொன்ன காரணம். தற்போது சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்.

0
533
- Advertisement -

பருத்திவீரன் படம் குறித்து அமீர் அளித்திருக்கும் பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை.

-விளம்பரம்-

பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார். சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார்.

- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை:

என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார். அமீர் ஒரு திருடன் என்று விமர்சித்து கூறியிருக்கிறார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், ஞானவேல் ராஜாவை விமர்சித்து இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார், சுதா, பொன்வண்ணன், சினேகன், பழனியப்பன், பாரதிராஜா என பல பிரபலங்கள் கடுமையாக கண்டித்து பேசி இருந்தார்கள்.

பிரபலங்கள் கண்டனம்:

தற்போது கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இப்படி அனைவருமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக திரும்பிய உடன் ஞானவேல் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் பருத்திவீரன் குறித்து அமீர் அளித்திருக்கும் பழைய பேட்டி விடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அமீர் பேட்டி வீடியோ:

அந்த வீடியோவில் பார்வையாளர் ஒருவர், பருத்திவீரன் படத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணை கார்த்தியின் அப்பா திருமணம் செய்து கொள்ளுவார். இதனால் கார்த்தி அம்மா,அப்பாவை லாரி ஏத்தி கொன்றுவிடுவார்கள். அந்த லாரியின் பெயர் ராமதாஸ் என்று இருக்கும். இது எதேச்சையாக நடந்ததா? இல்ல திட்டமிட்டு வைத்ததா? என்று கேட்டார்கள். அதற்கு அமீர், சிரித்துக் கொண்டே எதேச்சையாக நடந்தது தான். நாங்கள் ஒரு லாரி வேண்டும் என்று கேட்டோம்.

பருத்திவீரன் படம்:

அந்த சமயத்தில் ராமதாஸ் என்ற பெயர் போட்ட லாரி தான் வந்தது. சரி இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டோம். மற்றபடி திட்டமிட்டது எல்லாம் இல்லை என்று கூறியிருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழில் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த படம் பருத்திவீரன். இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு, சுஜாதா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

Advertisement