விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் உங்கள் வாக்குகளை இழப்பீர்கள் – பட விழாவில் இயக்குனர் அமீர் ஆவேசம்

0
210
- Advertisement -

விஜய் அரசியல் குறித்து இயக்குனர் அமீர் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் இயக்குனர், நடிகர் என பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது இவர் அறிமுக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரு.மாணிக்கம் என்ற நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது.

- Advertisement -

விழாவில் அமீர்:

இதில் பட குழுவினருடன் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் இயக்குனர் அமீர், திமுக மூன்றாம் தர பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். ஆபாசமாக பேசுவதாலோ, குடும்பத்தை அவதூறாக பேசுவார்களோ, அவர்களுடைய தொழிலை இழிவு படுத்தி பேசுவதாலே எவரையும் வீழ்த்தி விட முடியாது. விஜயை தரம் தாழ்ந்து பேசுவதால் நீங்கள் உங்களின் வாக்குகளை இழக்கும் நிலை தான் வரும்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

அது உங்களுக்கு தான் பலவீனத்தை உருவாக்கும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ டங்ஸ்டன் போன்றவற்றில் விஜய் கருத்து என்ன? மக்கள் பிரச்சனையில் அவரது கருத்து என்ன? என்பதை வைத்து தான் விஜயின் அரசியலை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் பிரச்சனைகளில் விஜய் என்ன நிலைப்பாடு எடுக்கிறார், என்ன மாதிரி செயல்படுகிறார் என்பதை பொறுத்து தான் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயினுடைய நிலையை தீர்மானிக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் அரசியல்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு இவர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து இருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு:

அந்த கட்சி கொடியில் வாகை மலரும் இரு பக்கமும் யானை உருவம் இருந்தது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய். மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. பின் மாநாட்டில் விஜய், தன் கட்சி கொள்கைளை குறித்து பேசி இருந்தார். தற்போது கட்சி பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement