பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டது இதைத்தான் காண்பிக்கிறது – இயக்குனர் அமீர் கடும் விமர்சனம்.

0
1393
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் உடனான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாக்கிஸ்தான் வீரரை நோக்கி இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் கோசம் போட்டது சமூக வலைதளத்தில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவரிலேயே இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்றது.

- Advertisement -

இதன் ,மூலம் இந்தியா, உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது. அதே சமயம் இந்த போட்டியின் போது இந்தியர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டுள்ளனர். போட்டி நடைபெறும் போது ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்கும் பாடல்களும் மைதானத்தில் ஒலிக்கப்பட்டுள்ளன. அதே போல ஐசிசி நடத்திய போட்டியை போல் தெரியவில்லை என்பதே உண்மையாகும்.

-விளம்பரம்-

மாறாக அது பிசிசிஐ நடத்திய இருதரப்பு தொடரை போல் இருந்தது என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் விமர்சித்து இருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வர பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அமீர் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘ஒரு படித்த சமூகத்தை கடந்த 10 ஆண்டுகளாக எவ்வாறு மடை மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த ரோஷன். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலானோர் மேல் தட்டு மக்கள் தான் மேல் தட்டு மக்கள் மூலையில் என்ன இருக்கிறது என்பதற்கான கோஷம்தான்.

விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்கிறேன் இந்திய கிரிக்கெட் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது அல்ல அது ஒரு கிரிக்கெட் வாரியம். வீரர்களை நாடு உருவாக்கவில்லை ஒரு தனியார் நிறுவனம்தான் உருவாக்கியிருக்கிறது அது ஒரு வர்த்தகம் அந்த வர்த்தகத்தில் போய் உங்கள் தேசப்பற்று காட்டுவீர்கள் என்றால் உங்கள் அறியாமையை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்’ என்று பேசியுள்ளார்.

Advertisement