‘இஸ்லாத்தில் பெண்கள் அடக்குமுறை’ – நடிகைகளானதும் வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய கதாநாயகி இரட்டையர்கள்.

0
2074
- Advertisement -

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புது நிகழ்ச்சி தான் யார் அடுத்த கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா நடுவர்களாக இருந்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் ரூபீனா மற்றும் ரூபீஸீனா என்ற இரட்டையர்கள் டைட்டில் பட்டத்தை வென்றார்கள். இவர்கள் டைட்டில் வின்னர் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். இதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர்கள் ‘ எங்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் மதத்தை வைத்து பேசுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நடிப்பு என்பது திறமை சார்ந்த விஷயம்.

-விளம்பரம்-

மதரீதியாக எங்களை பேசுவது எங்களை ரொம்பவே காயப்படுத்திச்சு. கொஞ்ச நாள் அதை நினைத்து அழுதோம். எல்லோரும் உங்களை எத்தனை பேர் லவ் பண்றாங்க, சப்போர்ட் பண்றாங்க அதை பாருங்கள் என்று ஆறுதலாக சொன்னார்கள். இப்ப எதுனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் எங்களுக்குள் வந்து விட்டது. இதுவரைக்கும் மூன்று படங்கள் செய்திருக்கிறோம். மூன்று படத்திலும் சேர்ந்து நடித்தோம் என்றும் கூறி இருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் துடிக்கும் கரங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் பிரெஸ் மீட் நடந்தது. இந்த சந்திப்பில் இவர்களிடம் கேள்வி கேட்ட பயில்வான் ‘இஸ்லாத்தில் கலை கலாச்சாரம் போன்றவற்றில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று இருக்கிறதே, நீங்கள் குரான் எல்லாம் படிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த ருபீனா கலைக்கு ஜாதி மத வேறுபாடு கிடையாது.

அதை நாங்கள் சரியாக செய்தால் அதில் எந்த தவறும் கிடையாது உங்களுடைய திறமையை நாங்கள் வெளிக்காட்ட நினைத்தோம். பெரும்பாலும் இஸ்லாம் மதத்தில் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று நிறைய பேர் அடக்கி வைத்துள்ளார்கள் அதிலிருந்து கொஞ்சம் வெளியில் வர நினைத்தோம் இது எங்களுக்கு பிடித்திருக்கிறது இது எங்களுடைய விருப்பம் எங்களுடைய பெற்றோர்களும் எதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இது எங்கள் வாழ்க்கை நாங்கள் எங்களுக்காக வாழ்கிறோம் என்று பேசி இருந்தார்கள் இவர்களின் இந்த பேச்சை தொடர்ந்து இஸ்லாம் மதத்தில் பெண்களை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று எப்படி செல்லலாம் என்று பல்வேறு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர்கள் இருவரும் இஸ்லாத்தில் அடுத்த மார்க்கத்தைப் பற்றிய தவறாக பேசக்கூடாது என்று இருக்கும் போது நான் எப்படி என்னுடைய மார்க்கத்தையே தவறாக பேசுவேன்.

பெண்கள் அடக்கி வைக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னது சிலர்தான் அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னேன் இஸ்லாத்தில் அப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று சொல்லவில்லை. அனால், நாங்கள் பேசிய வார்த்தைகள் தவறாகிவிட்டது. உண்மையில் நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கெடுக்குறேன். நான் பேசிய வார்த்தைக்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்கள்.

Advertisement