தங்கல் பட நடிகை சுஹானி இறப்பிற்கு அமீர் கான் பதிவிட்டு இருக்கும் இரங்கல் பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமீர்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அமீர்கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தங்கல்.
இந்த படத்தை இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமீர்கானுடன், கிரண் ராவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தை பிற மொழிகளிலும் ரிலீஸ் செய்து இருந்தார்கள். இது மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் கதை.
சுஹானி குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை சுஹானி பட்னாகர். இந்தப் படத்தின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் மூலம் சுஹானிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்திருந்தது. இந்தப் படத்தை அடுத்து இவர் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
சுஹானி குறித்த தகவல்:
இதனால் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில காலங்களாகவே இவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். அதோடு கடந்த ஆண்டு இவருக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு இந்த விபத்தினால் சில பக்க விளைவுகளும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுஹானி பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார்.
சுஹானி இறப்பு:
மேலும், கடந்த சில வாரங்களாக இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி சுஹானி இறந்திருக்கிறார். தற்போது இவருக்கு வெறும் 19 வயது தான். இவ்வளவு குறைவான வயதில் இவர் இறந்திருப்பது பாலிவுட் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய இறப்பை அடுத்து பாலிவுட் திரையுலக மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலருமே இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
அமீர் கானின் இரங்கல் பதிவு:
இந்நிலையில் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில், சுஹானி காலமானதை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அவருடைய தாயார் பூஜாஜிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். திறமையான சுஹானி இல்லாமல் இருந்திருந்தால் தங்கல் படம் முழுமை அடைந்திருக்காது. சுஹானி நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.