அல்டிமேட் நிகழ்ச்சியில் அமீரை பற்றி தப்பாக பேசிய தாமரை, பதிலடி கொடுத்து உள்ள அமீர் – வைரலாகும் வீடியோ

0
483
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அமீர் மிக சிறந்த நடன கலைஞர். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர். தன் தாய், தந்தை இழந்து பட்ட கஷ்டங்கள் எல்லாம் கடந்து வந்த பாதையில் அமீர் சொல்லி இருந்தது பலருக்கும் வருத்தத்தை அளித்தது. பின் அமீர் வீட்டில் மிக திறமையாக விளையாடி வந்தார். முதல் கோல்டன் டிக்கெட் வின் பண்ணதும் அமீர் தான். இதனிடையே அமீர் -பாவனி ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்கிறேன், என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அமீர்- பாவனி குறித்த தகவல்:

ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்று சொல்லியும் மறுத்து வந்திருந்தார். இருந்தும் அமீர் விடாமல் தன்னுடைய காதலை தெளிவாக சொன்னார். பின் ஒரு நாள் இரவில் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது போல் ஒரு காட்சி வந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக பேசி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்தும் அதை பற்றியே விமர்சனம் சென்று கொண்டு இருந்தது. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீர் இன்டர்வியூ, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று பிஸியாக இருக்கிறார்.

amir

அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை:

அதேபோல் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உடன் உரையாடியும் வருகிறார்கள். இந்த நிலையில் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை, அமீர் பற்றி பேசியிருக்கும் வீடியோ குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. அது என்னவென்றால், தற்போது தாமரை அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பிக் பாஸ் சீசன் 5 இல் இருந்த போட்டியாளர்கள் குறித்து பேசி வருகிறார். ராஜு, பிரியங்கா என பல பேரை குறித்து, யாரும் என்னை நிகழ்ச்சிக்கு பிறகு கண்டுகொள்ளவில்லை, பேசவில்லை. எல்லோரும் நடிக்கிறார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு சம்பாதித்து இருந்தார்.

-விளம்பரம்-

அமீர் குறித்து தாமரை பேசியது:

அந்த வகையில் தற்போது இவர் அல்டிமேட் நிகழ்ச்சியில் அமீர் குறித்து சில சர்ச்சையான விஷயங்கள் பேசி இருக்கிறார். இதனால் கொந்தளித்த ரசிகர்கள் தாமரையை விமர்சித்து வீடியோக்களை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து அமீர் சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்று போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை என்னைப் பற்றி பேசியிருப்பது ட்விட்டர், சோசியல் மீடியா என்று எல்லாத்தையும் பார்த்தேன். பொதுவாகவே நம்மைப் பற்றித் நெகட்டிவான கமெண்ட்கள் வந்தால் அதை அப்படியே விட்டு விடுங்கள். அதை எதையுமே செய்யாதீர்கள். அதுவா தானாக நின்றுவிடும்.

தாமரை குறித்து அமீர் சொன்னது:

ஒருத்தன் நம்மைப் பற்றி பேசுகிறார்கள் என்று நாம் பதிலுக்கு பேசினால் அது பெரிதாக மாறுமே தவிர பிரச்சினை முடியாது. அதே போல் தான் தாமரை பேசியதை அப்படியே விட்டு விடுங்கள். அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம். ஒருத்தர் செய்கிறார்கள் என்று நாமும் அதை செய்ய வேண்டாம். நீங்கள் செய்கிற போஸ்ட், ஸ்டோரி, வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஆனால், நெகட்டிவாக ஒருவர் பேசுகிறார்கள் என்று அவர்களைத் தாக்கி வீடியோ செய்வது வேண்டாம். இதை உங்களிடம் நான் வேண்டுகோளாக வைக்கிறேன். அதை அப்படியே விட்டு விடுங்கள். அது அப்படியே மறைந்து விடும் என்று எதார்த்தமாக அமீர் பேசி இருந்தார். இப்படி அமீர் பேசியிருந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement