ஆசிபா படுகொலை..! நீ ஒரு குடிகாரி..! அஜித் பட நடிகையை வெளுத்து வங்கிய ரசிகர்கள் !

0
2070
Actress pooja bhat

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர் கான் ,ஷாருகான் போன்ற நடிகர்களுடன் நடித்த பூஜா பட் , பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதா பட்சனை குடிகாரன் என்று சர்ச்சியான கருத்தை தெரிவித்து ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்தின் மகளான இவர் 1994 இல் தமிழில் பிரசாந்த் மற்றும் அஜித் நடித்த கல்லூரி வாசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

pooja

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காஸ்மீர் மாநிலத்தில் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசிபாவை பற்றி பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என்று அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அமிதாப் ரசிகர்கள் பூஜாவை குடிகாரி என்று விமர்சித்து உள்ளனர். இதற்கு பதில் தாக்குதல் தந்த பூஜா அமிதாப் பட்சன் படங்களில் மட்டும் தான் பெண்களுக்காக போராடுவாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் அமிதாப்பின் ரசிகர்கள் முழுநேரம் குடிக்கு அடிமையானவர் எல்லாம் இப்படி கேட்கத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

pooja bhatt

இதற்கு பொறுமையாக பதிலளித்த பூஜா பெற்றோர்களுக்கு குடி பழக்கம் இருந்தால் அது நமக்கும் சுலபமாக வந்து விடுகிறது . ஆனால் நான் குடியை விட்டு 485 நாட்கள் ஆகிவிட்டது. நல்ல வேலை இப்போது நான் குடியை விட்டுவிட்டேன் , அதனால் தான் தெளிவாக இந்த கருத்தை கூறினேன் என்று கூறியுள்ளார்.