விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி. சூரியன் எஃப்.எம்-ல் ஒரு வருடம் ஆர்.ஜேவாக வேலைபார்த்த பிறகு, புதுயுகம் ‘கேலி பாதி கிண்டல் பாதி’ நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் ஶ்ரீரஞ்சனி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தார். கலக்க போவது நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீரஞ்சனி. கடந்த சில மாதங்களாக இவரை அந்த நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் ஸ்ரீரஞ்சனி கருவூட்றிருக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.
இதையும் படியுங்க : எதிர்பாராத விதமாக தனது அருவருப்பான போட்டோவை பதிவிட்ட காஜல்.! உண்மை இதானாம்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம் 2016-ம் ஆண்டு ஆண்டு நடைபெற்றது.
கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்து வந்த ஸ்ரீரஞ்சினிக்கு கடந்த 7-ஆம் திகதி ஸ்ரீரஞ்சனிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமித்.