சித்து – ஸ்ரேயாவை தொடர்ந்து ரியல் ஜோடிகளான ரீல் ஜோடி – வெளிப்படையாக காதலை அறிவித்த அம்மன் சீரியல் நடிகை

0
550
- Advertisement -

அடுத்த சீரியல் ஜோடியின் திருமணம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் களைகட்டி வருகிறது. சின்னத்திரையில் நடிக்கும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடி ஸ்ரேயா– சித்து. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். கடந்த வாரம் தான் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் மதன்– ரேஷ்மா.

-விளம்பரம்-
அமல்ஜித் - பவித்ரா

தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அபி டெய்லர் என்ற தொடரில் ஹீரோ, ஹீரோயினாக இவர்கள் நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே நீண்ட காலமாக காதலித்து வந்திருந்தார்கள். சமீபத்தில் தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. இவர்களை தொடர்ந்து செம்பருத்தி நாயகி ஷபானா–ஆர்யான் ஜோடி திருமணமும் திடீரென்று நடந்தது. இப்படி தொடர்ச்சியாக தொலைக்காட்சி ஜோடிகளின் திருமணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : சிம்புவ பத்தி மட்டும் பேசுறீங்களே, கல்யாணியின் Transformation பத்தி தெரிஞ்சா ஷாக்காவீங்க. இதோ புகைப்படம்.

- Advertisement -

அந்த வரிசையில் அடுத்து திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஜோடி அமல்ஜித் – பவித்ரா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அம்மன். இந்த தொடர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடரில் ஜோடியாக அமல்ஜித் – பவித்ரா நடிக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக சமூகவலைத்தளங்களில் அறிவித்து இருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

அமல்ஜித் - பவித்ரா

அமல்ஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Half’ என கேப்ஷனிட்டு பவித்ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து உங்களுடைய திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement