தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா’ நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தான் பல வருடமாக தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் தெருநாய்கள் நகரத்தில் வசிக்க கூடாது, தெருநாய்களுக்கும் நகரத்தில் வசிக்க உரிமை இருக்கிறது என்று இரு தரப்பில் விவாதம் நடைபெற்றது. ஒருபுறம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் தெரு நாய்கள் மனிதர்களுக்கு எந்த தீங்கும் இழைப்பதில்லை என்று வாதிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் தெரு நாய்களால் கடிபட்டு பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக தங்களுடைய கவலைகளை எடுத்து வைக்கிறார்கள். இருதரப்பிலுமே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த படவா கோபி நாய்க்கு ஆதரவாக பேசி இருந்ததை பலரும் ட்ரோல் செய்திருந்தார்கள். இதனால் இவர் வேதனையில் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இவரை தொடர்ந்து நடிகை அம்மு ராமச்சந்திரன் நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
நீயா நானா:
இவர் மனிதர்களின் உயிருக்கு பாதிப்பு வந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், விலங்குகள் எல்லாம் பாதிக்க கூடாது என்பது போலவே பேசி இருந்தார். ஒரு நாய் குறுக்கே வந்து குழந்தை அநியாயமாக உயிர் போனதை பற்றி கவலைப்படாமல் எலி செத்துப் போனதை நினைத்து வருத்தப்பட்டு பேசியிருந்தார். இவர் இப்படி பேசி இருந்ததை பார்த்து பலருமே அம்முவை ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை அம்மு வெளியிட்ட வீடியோவில், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பலரும் ட்ரோல் பண்ணிட்டு இருக்கீங்க. நிறைய தவறான வார்த்தைகளை நீங்கள் யூஸ் பண்ணுகிறீர்கள். அதற்கு வருத்தப்பட்டு நான் இந்த வீடியோவை போடவில்லை.

அம்மு சர்ச்சை பேச்சு:
நீயா நானாவில் என்ன நடந்தது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்தணும் என்பதற்காக தான் இந்த வீடியோவை போட்டு இருக்கிறேன். நீயா நானா என்பது ஒரு நிகழ்ச்சி. 8 மணி நேரம் ரெக்கார்ட் பண்ணின ஒரு விஷயத்தை 45 நிமிடம் எடிட் பண்ணி போட்டு இருக்கிறார்கள். நீயா நானா நிகழ்ச்சியின் எடிட் பண்ணாத வெர்ஷன் பார்த்தீங்கன்னா என்ன நடந்தது என்ற கதை உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம் நாயை விரும்புவார்கள் தெருநாயை ஆதரிக்கிறோம் என்று பேசி இருந்தோம். இன்னொரு பக்கம் வேண்டாம்னு சொல்லுறவங்க இருந்தார்கள். ஆப்போசிட் சைடு இருந்தவர்களுக்கு தான் வாய்ப்புகள் அதிகம். நாய்களால் பாதிக்கப்பட்டவர்களை தான் அழைத்து வந்து அங்க பேச வைத்தார்கள்.
https://www.youtube.com/watch?v=O5-Kz5qdle4&t=302s
அம்மு வீடியோ:
எங்களுடைய தரப்பில் நிறைய பேருக்கு என்ன விஷயம் நடக்கிறது என்று கூட புரியவில்லை. எங்களை பேசவும் விடவில்லை. அப்படியே பேச வந்தாலும் கோபி அவர்கள் பேசவே விடவில்லை. பேசாதீங்க, உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம் சொல்லிவிடுவார். என்ன பண்ணனும் நினைத்தார்கள் என்று தெரியவில்லை. எங்க ரெண்டு பேரையும் மோத விட்டு அழகு பார்த்தார்கள். நீங்க டிஆர்பிக்காக எதுக்கு இவ்வளவு மோசமாக விளையாடினீங்கன்னு எனக்கு புரியவில்லை. இதுவரைக்கும் எந்த சேனல் பற்றியும் நான் இப்படி ஒரு வீடியோ போட்டதே கிடையாது. இதனால் பர்சனல் ஆக பாதிக்கப்பட போவது நாய்கள் மட்டும் இல்லை நாங்களும் தான்.
View this post on Instagram
ஆதங்கத்தில் அம்மு:
நீங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் அங்க பேசியதை இங்க தூக்கி போட்டு, இங்க பேசியதை அங்க தூக்கி போட்டு இருக்கீங்க. நான் பேசுனதெல்லாம் கட் பண்ணி எடிட் பண்ணி எப்படியோ மாத்தி மாத்தி வைத்திருக்கிறார்கள். மக்களே நமக்கு நாய்கள் வேணும், அதே மாதிரி அந்த நாய்களிடமும் கடிவாங்காமல் எப்படி தோழமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று தான் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு போனோம். மத்தபடி உங்களுடைய வெறுப்பை சம்பாதிக்கணும் என்று எங்களுடைய நோக்கம் கிடையாது. நானும் ஒரு மனுஷி தான். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. இன்னைக்கு நான் ஒரு இடத்தில் இருக்கிறேன் என்றால் முக்கியமான காரணம் நீங்களும் தான். அப்படி இருக்கும்போது எதுக்காக உங்களை கஷ்டப்படுத்த நான் யோசிக்க போறேன். இதை கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.






