விஜய் ஒரு நாள் மட்டுமே நடித்து கைவிட்ட படம் ! அதில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற சூர்யா ?

0
8520
- Advertisement -

தனது ஆரம்ப காலத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அந்த சமயத்தில் தான் தனது அப்பா மற்றும் இயக்குனர் சந்திரசேகரை விட்டு விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார் விஜய்.
இந்த படம் சரியாக அடித்து அவருக்கு ஒரு காதல் ஹீரோ இமேஜைக் கொடுத்தது. அந்த படம் தான் அவருக்காக ப்ரேக் ஆகும். சரியாக சொல்லபோனால் இயக்குனர் விக்ரமன் சரியான நேரத்தில் வந்து விஜய்க்கு ஒரு நல்ல படத்தைக் கொடுத்தார். அதன் பின் பல காதல் படங்களில் நடித்து மாஸ் காட்டினார் விஜய்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: தளபதி-62, லேட்டஸ்ட் அப்டேட், 8 தேசிய விருதுகளை வாங்கியவர் தளபதி 62 படத்தில் !

- Advertisement -

மீண்டும் விஜயை வைத்து அதே போன்று ஒரு காதல் படத்தை இயக்க முடிவு செய்து ‘உன்னை நினைத்து’ என்ற ஒரு காதல் ஸ்க்ரிப்டை தயார் செய்தார் விக்ரமன். இதில் விஜய் நடிக்கவும் ஒப்புக் கொண்டு போட்டோ சூட் எல்லாம் முடிந்து நடிக்க ஆர்ம்பித்தார். படத்தின் சூட்டிங் ஆரம்பித்து ஒரு நாளில் படத்தில் இருந்து விலகினார் விஜய்.
ஆனால், என்ன பிரச்சனை என்று இதுவரை தெரியவில்லை. இந்த படத்தில் தான் சரியாக வந்து நடித்தர் சூரியா. அப்போது பெரிய மார்கெட் ஏதும் இல்லாத சூரியாவிற்கு இந்த படம் பெரும் வரவேற்பைக் கொடுத்தது. உன்னை நினைத்து படம் வெளியாகி செம்ம ஹிட் ஆனது. அதன் பின்பு தான் சூரியாவிற்கு என ஒரு மார்க்கெட் உருவாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருகிறார்.

Advertisement