தளபதி-62, லேட்டஸ்ட் அப்டேட், 8 தேசிய விருதுகளை வாங்கியவர் தளபதி 62 படத்தில் !

0
1691
- Advertisement -

மெர்சலுக்கு அடுத்து,விஜய் தனது இரண்டு மெகா ஹிட் படம் கொடுத்த இயக்குனர் முருகதாசுடன் கை கோர்த்துள்ளர். முந்தைய கத்தி மற்றும் துப்பாக்கி படங்களைப் போலவே இந்த படமும் சமூக விழிப்புணர்வு படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் வருகிறார் விஜய் எனவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது படத்திற்கான நடிகர், நடிகைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் முருகதாஸ்.

-விளம்பரம்-

இதையும் பிடிங்க: விஜய்யின் 62வது படம் ! படப்பிடிப்பின் தேதி மற்றும் இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

- Advertisement -

இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா அல்லது ஏ.ஆர் ரஹ்மானிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. மேலும், நடிகயாக ரகுல் ப்ரீத் சிங் அல்லது நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
தற்போது அதிகாரப்பூர்மான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக படத்திற்கான ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளர். அதே போல், படத்திற்காக எடிட்டராக துப்பாக்கி படத்திற்கு எடிட் செய்த, 8 முறை தேசிய விருது வென்ற ஶ்ரீகர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் துப்பாக்கியின் விசுவல் மீண்டும் ஒரு முறை பார்க்க தயாராகியுள்ள்னர் விஜய் ரசிகர்கள்.

Advertisement