இனி இவருக்கு பதில் இவர் – பிரபல சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வில்லாதி வில்லி. யார் தெரியுதா ?

0
1154
vandana
- Advertisement -

சன் டிவி சீரியலில் வில்லியாக நடிகை வந்தனா மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மகராசி. இந்த தொடர் 2019ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மூன்று ஆண்டுகளை கடந்தும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஸ்ரீரஞ்சினி, திவ்யா ஸ்ரீதர், எஸ் எஸ் ஆர் ஆர்யன், விஜய், ராம்ஜி, ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் சீரியல் இருந்து விலகிவிட்டார்.

- Advertisement -

மகராசி சீரியல்:

அவருக்கு பதிலாக தற்போது ஹீரோயினி ரோலில் ஸ்ரீத்திகா சனீஷ் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே மெட்டிஒலி நாடகத்தில் நடித்து இருந்தார். அதன்பின் இவர் முத்தாரம் தொடரில் ஷாலினியாகவும், கலசம் தொடரில் மதுமிதாவாகவும் நடித்தார். இந்த சீரியல்கள் மூலம் கிடைத்த வரவேற்பை தொடரந்து இவர் உரிமை தொடரில் புவனா நட்ராஜன், குலதெய்வம் தொடரில் அலமேலு போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார்.

வந்தனா குறித்த தகவல்:

இந்த நிலையில் மகராசி சீரியலில் வில்லியாக நடிகை வந்தனா மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வந்தனா மைக்கேல். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் மைக்கேலின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக தான் வந்தனா சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

வந்தனா சின்னத்திரைப்பயணம்:

அதற்குப்பின் இவர் பல சீரியல்களில் வில்லியாக மிரட்டி வருகிறார். பெரும்பாலும் இவர் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். என்னதான் இவர் சீரியலில் வில்லியாக நடித்து இருந்தாலும் நிஜத்தில் இவர் ரொம்ப அமைதியானவர். இவர் சன் டிவி சீரியல் மட்டுமில்லாமல் விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல் சீரியல்களிலும் வில்லியாக மிரட்டியிருக்கிறார். பின் இடையில் சிலகாலம் இவர் சின்னத்திரையிலிருந்து பிரேக் எடுத்திருந்தார்.

சீரியலில் என்ட்ரி கொடுத்து உள்ள வந்தனா:

தற்போது இவர் சன் டிவி மகராசி சீரியலில் மீண்டும் வில்லியாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதை வந்தனாவே தன்னுடைய இன்ஸ்டாவில் மகராசி ஹீரோயினி ஸ்ரீத்திகாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து உறுதி செய்து இருக்கிறார். மகராசி சீரியலில் ரியாஸ்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வில்லி ரோலில் வந்தனா மைக்கேல் நடிக்க இருக்கிறார். இதனால் இனி சீரியல் சூடுபிடிக்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement