ஆனந்தம் சீரியல் நடிகை பிருந்தாவை ஞாபகம் இருக்கா ? அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காறா.

0
1434
brindha

சினிமா துறை என்றாலும் சரி , சின்னதிரை என்றாலும் சரி பிரபலங்களின் உறவினர்களுக்கு கண்டிப்பாக ஒரு புகழ் கிடைத்து விடுகின்றது. அதிலும் குறிப்பாக பிரபலங்களின் பிள்ளைகளாகவோ,சகோதர சகோதரிகளாகவோ இருந்து விட்டால் அவர்களது பெயர் விரைவில் பிரபலமாகி விடுகிறது. அந்த வரிசையில் தமிழ் சின்ன திரையில் பல இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை பிருந்தா தாஸ்.

இவர் சன் டிவியில் ஒளிப்பிப்பார்பான ஆனந்தம் என்ற பிரபல தொடரில் நடித்து பிரபலமானார். மேலும் இவருக்கு கிஷன் தாஸ் என்ற மகன் இருக்கிறார். பிரத நாட்டிய கலையை கற்றுவந்த பிருந்தா. தனது கல்லூரியில் தான் ஆடிய நடனத்தை பார்த்துதான் பிரபல . டி.டி.மெட்ரோ சேனலின் ‘நம் குடும்பம்’ என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு பெட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இவர் நடித்த ஆனந்தம் தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : சித்ரா கட்டிய இதே புடவையில், இதே போஸில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை – அடுத்த முல்லை இவங்க தான். யாருனு பாருங்க.

- Advertisement -

தற்போது பிருந்தாவின் மகனுக்கு 21 வயதாகிறது. இவர் யூ டியூப் சேனல் ஒன்றில் மிக பெரிய பிரபலமாக இருந்து வருகிறார். சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஆண்டு “பறந்து செல்லவா” என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு வெளியான ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாம் காண நேரிட்டது.

அதில் இவரது தற்போதைய புகைப்படங்களை காணும் போது மிகவும் வியப்பாகவே இருந்தது. நடிகை பிருந்தா தனது மகனை ஒரு சிங்கள் மதராக வளர்த்து வருகிறார் என்று ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும், பிருந்தாவின் மகன் தற்போது சினிமாவில் எப்படியாவது ஒரு அறியக் கூடிய நடிகராக வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறாராம். இதோ அவரது ஒரு சில சமீபத்திய புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement