விஜய்யை மட்டுமில்லை,அஜித்தையும் எச்சரித்த Dr.அன்புமணி ராமதாஸ்.! புகைப்படம் உள்ளே

0
759
Ajith-and-vijay

சினிமாவில் ரஜினி- கமல் என்ற தலைமுறைக்கு பிறகு விஜய் – அஜித் என்று தான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இதில் விஜய் படத்திற்கு மட்டும் பிரச்னை புக் செய்து காத்திருக்கும்.

சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் , நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது இருந்ததால் பா.ம.க இளைஞர் அணி தலைவரான அன்பு மணி ராமதாஸ்’விஜய் புகை பிடிப்பதை உகப்படுத்துகிறார், இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்’ தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

விஜய் படத்திற்கு மட்டும் தான் அன்பு மணி கண்டனம் தெரிவித்துள்ளார் என்று பார்த்தால், இவர் தல அஜித்தையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் அஜித் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் அசல். இந்த படத்திற்கான போஸ்டரில் அஜித் புகைபிடிப்பது போல இருந்ததால் அதனையும் எதிர்த்துள்ளார் அன்புமணி.

asal-poster

இதில் விடயம் என்னவென்றால் அஜித் அசல் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து நடித்த ‘மங்காத்தா’ படத்திலும் புகைபிடிக்கும் காட்சிகளை வைத்திருந்தார். இதன் மூலம் தல- தளபதி ஆகிய இருவருமே அன்புமணியின் எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது.