விஜய் நீங்க இதுக்கு கேட்கப்பட வேண்டும்.! சர்கார் போஸ்டரை கேவலப்படுத்திய அரசியல் தலைவர்!

0
1080
vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. தற்போது வரை அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் லைக்குகளை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் போஸ்டர் தற்போது சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

இதுவரை இந்த படத்திற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது அதில் முதல் போஸ்டரில் நடிகர் விஜய் ஒரு கையில் லைட்டருடன், வாயில் சிகிரேட் வைத்துள்ளது போல போஸ் கொடுத்திரிருக்கிறார். இதனால் விஜய் எப்படி சிகிரேட் பிடிப்பது போன்று புகைபடத்தில் போஸ் கொடுக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புஅணி ராமதாஸ் ட்விட்டரில் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்’ நீங்கள் (விஜய்) சிகிரேட் இல்லாமலே ஸ்டைலிஷ் ஷாக தான் இருப்பீர்கள். புகைபிடித்தல் உயிரை கொள்ளும், புற்றுநோயை உண்டாக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொரு பதிவில் ‘நடிகர் விஜய், தனது படத்திற்காக புகைப்பிடிப்பதை ஊக்குவைப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் விஜய் ‘அழகிய தமிழ் மகன்’ என்ற படத்தில் புகைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்ததால் அவருக்கு அன்புமணி அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் விஜய் ‘இனிமேல் புகைபிடிப்பதை போன்று நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்திருந்த ஒரு செய்தி தாளில் வந்த செய்தியையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் படத்தின் போஸ்டருக்கே இவ்வளவு எதிர்ப்பா என்று விஜய் ரசிகர்கள் சற்று சளித்தி வருகின்றனர்.

Advertisement